நூல்கள் விற்பனை
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை நடந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை சார்பில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளான அண்ணா பிறந்த தினமான நேற்று 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்கவிழா நேற்று நடந்தது. இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனையை தொடங்கி வைத்து, இந்த வாய்ப்பை மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். விழாவில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சிவாஜி பல்கலைக்கழக துணைவேந்தர் சிர்க்கி, பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் நீலகண்டன், பதிப்புத்துறை இயக்குனர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் மற்றும் புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story