திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:46 PM GMT)

கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.

ஆடுகள் விற்பனை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன்கிழமையில் வாரச்சந்தைகள் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நடைபெறும். புதன்கிழமை மாட்டுச்சந்தை மட்டும் நடைபெறும். பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் கருப்பணசுவாமி கோவில் திருவிழா நடைபெறும்.

மேலும் திருப்புவனத்தில் உள்ள பூமாரிஅம்மன், ரேணுகாதேவி அம்மன் திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் கிடாய்களை வெட்டுவார்கள்.

ரூ.1 ேகாடிக்கு விற்பனை

இதனால் திருப்புவனத்தில் நேற்று வாரச்சந்தையில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மதுரை, மேலூர், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. வியாபாரிகள் முதல் நாள் மாலையிலேயே ஆடுகளைகொண்டு வந்து கட்டியதால், அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

திருவிழாவுக்காக கிடாய்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

இதே போல் கோழி, சேவல்களும் அதிகம் விற்பனையானது. சந்தைக்கு விற்பனைக்காக ஆடுகளை ஏற்றி வந்த வாகனங்கள் மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருப்புவனம் சந்தையில் நேற்று மட்டும் சுமார் ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story