வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இடுபொருள் விற்பனை தொடக்கம்


வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இடுபொருள் விற்பனை தொடக்கம்
x

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இடுபொருள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விற்பனை மையத்தை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. பாஸ்கர் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

விற்பனை நிலையத்தில் தென்னை டானிக், பயறு ஒண்டர், மக்காச்சோள மேச்சிம், நிலக்கடலை ரிச், பருத்தி பிளஸ், மண்புழு உரம், நுண்ணூட்ட உர கலவை, உயிர் உரங்கள், பூஞ்சான கொல்லிகள், காய்கறி விதைகள் மற்றும் அலுவலக நாட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனைக்கு வந்துள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றி வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஆர்த்தி ராணி விளக்கிப் பேசினார். விவசாயிகள் இடுப்பொருட்களை வாங்கி சென்றனர். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 04632- 220533 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் தெரிவித்தார்.

---


Next Story