தபால் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனை


தபால் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனை
x

பாவூர்சத்திரம் தபால் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்ற அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த கொடிகள் தற்போது தபால் நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த கொடியின் விலை ரூ.25 ஆகும். பாவூர்சத்திரம் தபால் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தேசியக்கொடியை ரூ.25 செலுத்தி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த தேசியக்கொடி விற்பனையை பாவூர்சத்திரம் தபால் நிலைய அதிகாரி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தபால் நிலைய அலுவலர்கள் ஜோதி, சுகுணா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story