கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை லாரி உரிமையாளர்கள் புகார்
தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதாக லாரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெரியகுளம் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜாத் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கடந்த சில நாட்களாக சில தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் மத்திய அரசு அறிவித்த விலையை விட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.18 வரை கூடுதலாக வசூல் செய்து வருகின்றனர். இதனால், லாரி, பஸ், வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தேனி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story