கூட்டுறவு அங்காடியில் தக்காளி விற்பனை
கூட்டுறவு அங்காடியில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.இதை மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையுடன் இணைந்து 10 கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி விற்பனையை மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை, மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story