ரூ.10½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை


ரூ.10½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
x

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 31 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்திற்கு விற்பனையானது.

நாமக்கல்

உழவர் சந்தை

நாமக்கல்லில் உள்ள கோட்டை ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் விளை நிலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் காய்கறிகள் மற்றும் பழவகைகளின் வரத்து அதிகரிப்பதோடு, விற்பனையும் கூடுதலாக இருக்கும்.

அதன்படி நேற்று நாமக்கல் உழவர் சந்தைக்கு 26½ டன் காய்கறிகள், 4½ டன் பழவகைகள் என மொத்தம் 31 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்து 410-க்கு விற்பனையானது. அவற்றை 6 ஆயிரத்து 200 பேர் வாங்கிச் சென்றனர்.

விலை விவரம்

அதில் தக்காளி கிலோ ரூ.14-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், புடலை கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது. மேலும் பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.50-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story