சேலம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ரூ.23¾ லட்சம் வயர்கள் திருட்டு

சேலம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ரூ.23¾ லட்சம் வயர்கள் திருட்டு
x

சேலம் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் ரூ.23¾ லட்சம் வயர்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் ரூ.23¾ லட்சம் வயர்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.எஸ்.என்எ.ல். அலுவலக வயர்கள்

சேலம் காந்திசாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் புதிய மற்றும் பழைய கேபிள் வயர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கேபிள் வயர்கள் திருட்டு போனது. அதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.

இது குறித்து அலுவலக உதவி பொது மேலாளர் பாஸ்கரன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து கேபிள் வயர்கள் திருடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீசார் விசாரணை

முதல் கட்டமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றிய 3 காவலாளிகள் உள்பட 4 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் கேபிள் வயர்கள் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story