சேலம்-கோவை பயணிகள் ரெயில் மார்ச் மாதம் முழுவதும் ரத்து


சேலம்-கோவை பயணிகள் ரெயில் மார்ச் மாதம் முழுவதும் ரத்து
x
தினத்தந்தி 1 March 2023 7:30 PM GMT (Updated: 1 March 2023 7:31 PM GMT)
சேலம்

சூரமங்கலம்:-

கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷனில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) நேற்று முழுவதுமாக இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் பராமரிப்பு பணி காரணமாக வருகிற 31-ந் தேதி வரை இந்த மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06802) நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் வருகிற 31-ந் தேதி வரை இந்த ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story