சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 20 July 2023 1:00 AM IST (Updated: 20 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அறங்காவலர் குழு தலைவர்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். ஆண்டுதோறும் ஆடித்திருவிழா இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து நியமிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன தேர்தல் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது.

என்.சக்திவேல் தேர்வு

முடிவில், அறங்காவலர் குழு தலைவராக சேலம் எஸ்.டி.ஹார்டுவேர்ஸ் மற்றும் எஸ்.டி. பிளைவுட் உரிமையாளர் என்.சக்திவேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ்இதைத்தொடர்ந்து அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் உறுப்பினர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பி.முருகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.டி.மணி, மாநகர துணை செயலாளர் பழக்கடை கணேசன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, பிரகாஷ், தமிழரசன், ஜெகதீஷ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஷ்ரப் அலி, தொழில் அதிபர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தனது அலுவலகத்திற்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story