சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: ''நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்''-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'டுவிட்டர்' பதிவு


சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
x

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்’ ‘ என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திட்டப்பணிகள் ஆய்வுக்காக சேலத்துக்கு வந்திருந்தார். அவர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் பணியாற்றிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு தளத்தின் சிறப்பை அறிந்து, அந்த நிறுவனத்தின் முகப்பு கோட்டை போன்ற தோற்றம் கொண்ட நுழைவு வாயில் முன்பு நின்று 'செல்பி' எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சேலம் கள ஆய்வின்போது வழியில் மாடர்ன் திரையரங்கம் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன்!. டி.ஆர்.சுந்தரம் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் திரையரங்கத்தின் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன்.9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்!.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story