சேலம் : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல் அமைச்சர் அறிவிப்பு


சேலம் : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல் அமைச்சர் அறிவிப்பு
x

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்..

சென்னை,

சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்..

இதுகுறித்து முதல் அமைச்சர் முக'ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

,சேலம் மாவட்டம் சேலம் வட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த திரு. நடேசன் த/பெ. சென்றாயன் (வயது 50), திரு. சதீஷ்குமார், த/பெ. கந்தசாமி (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம் கொல்லப்பட்டியை சேர்ந்த திருமதி. வசந்தா, க/பெ.பழனிசாமி, (வயது 45), திருமதி.மோகனா, க/பெ.வடிவேல் (வயது 38), திருமதி. மணிமேகலா, க/பெ.ராஜா, (வயது 36), திருமதி.மகேஸ்வரி, க/பெ.வெங்கடேசன் (வயது 32), திரு. பிரபாகரன், த/பெ.அண்ணாதுரை (வயது 31) மற்றும் திருமதி.பிருந்தா, க/பெ.மோகன் (வயது 28) ஆகிய 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு தலா 50,000 ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்


Next Story