நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ெபாங்்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகை காலம்

தற்போது பண்டிகை என்றாலே மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. மதுப்பிரியர்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள்.

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் முன்னதாக மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொள்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.

2 மடங்கு வரை அதிகரிக்கும்

நாகை மாவட்டத்தில் 57 டாஸ்மாக் கடைகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 44 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது.

பண்டிகை காலங்களில் மட்டும் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 2 மடங்கு வரை அதிகரித்து வருகிறது.

ரூ.11 கோடியே 18 லட்சத்துக்கு மது விற்பனை

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14,15 ஆகிய தேதிகளில் நாகை மாவட்டத்தில் உள்ள 57 டாஸ்மாக் கடைகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 44 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 2 நாட்களில் ரூ.11 கோடியே 18 லட்சத்து 42 ஆயிரத்து 30-க்கு மது விற்பனை செய்யப்பட்டது.


Next Story