பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுக்கோட்டையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த பொதுமக்கள் தயாராகினர். மேலும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை நடைபெற உள்ளது. வீடுகளிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள். இதையொட்டி பூஜைக்கான பொருட்கள் வாங்க புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் வருகை தந்தனர்.

களிமண்ணால் ஆன விநாயகர் சிலை, பூஜைக்கான தேங்காய், பழம், பொரி, சந்தனம், குங்குமம், பூ மாலைகள், பழ வகைகள், விநாயகர் சிலைகளின் மீது வைப்பதற்கான அலங்கார குடைகள், வாழைக்குலைகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். இதனால் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தன.

700 சிலைகள்

இதேபோல விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வாங்கியவர்கள் இடத்தில் அலங்கார பணிகளை மேற்கொண்டனர். விநாயகர் சிலைகள் இன்று முதல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். 20-ந் தேதி ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது உண்டு.

மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சிலை வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர போலீசாரும் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர்.


Next Story