அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் விளைபொருட்கள் விற்பனை

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் விளைபொருட்கள் விற்பனை
x

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் மதிப்பிலான நெல்- விளைபொருட்கள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.80.69 லட்சம் மதிப்பிலான நெல்- விளைபொருட்கள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் மாவட்டத்திலிருந்தும் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் நெல் மற்றும் பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது குறிப்பாக சொர்ணவாரி அறுவடை தொடங்கி ஜூலை 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் 173 விவசாயிகளிடமிருந்து 5 ஆயிரத்து 350 நெல் மூட்டைகள் வந்தடைந்தன.

தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருட்கள் ரூ.80.69 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த அறுவடை பருவத்தில் இதுவே உச்சபட்ச விற்பனையாகும் என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Next Story