ஆடுகள் வரத்து குறைவால்விற்பனை பாதிப்பு


ஆடுகள் வரத்து குறைவால்விற்பனை பாதிப்பு
x

ஆடுகள் வரத்து குறைவால் விற்பனை பாதிப்பு

திருப்பூர்

மூலனூர்

கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்தால் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கன்னிவாடி ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் இந்த சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

கடந்த 2 வாரங்களாகவே அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வியாபாரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த வாரம் நேற்று இரவு முழுவதுமே கடுமையான பனி பெய்து வந்ததால், அதிகாலை நேரத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்ததால் விவசாயிகளின் வரத்து குறைவாகவே இருந்து வந்தது.இதனால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 500 ஆகும் இந்த வாரம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.




Next Story