உப்பு உற்பத்தி அதிகரிப்பு


உப்பு உற்பத்தி அதிகரிப்பு
x

ராமநாதபுரம் அருகே உப்பு உற்பத்தி அதிகம் இருந்தும் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உப்பு உற்பத்தி அதிகம் இருந்தும் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி ஆணைகுடி, கோப்பேரிமடம், திருப்பாலைகுடி, உப்பூர், பத்தநேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் திருப்புல்லாணி மற்றும் திருஉத்தரகோசமங்கை அருகே ஆணைகுடி கிராமங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் உப்பு சீசன் களைக்கட்டி அதிக உற்பத்தி இருந்து வருகிறது. இருப்பினும் உப்பு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விலை குறைவு

இது பற்றி ஆணைகுடி உப்பள பாத்தியில் வேலை பார்க்கும் வேதாரண்யத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் உப்பு உற்பத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே அதிகமாகவே உள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு வரை ஒரு டன் 4000 ரூபாய் வரை விலை போன நிலையில் தற்போது ரூ. 2500-க்கு மட்டுமே விலை போனது.

உற்பத்தி அதிகமாக உள்ளதால் உப்பு விலையும் குறைந்துள்ளது. ஆணைகுடி பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் இருந்து சேகரிக்கப்படும் கல் உப்புகள் தூத்துக்குடிக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story