கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு


கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் கரைந்து வீணாகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் கரைந்து வீணாகிறது.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் முக்கிய தொழில் ஆகும்.

திருப்பாலைக்குடி, சம்பை பத்தனேந்தல், தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் மற்றும் திருப்புல்லாணி, வாலிநோக்கம் உள்ளிட்ட ஊர்களில் ஏராளமான உப்பள பாத்திகள் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் மார்ச் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி சீசன் காலம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் உப்பு உற்பத்தியும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தேவிபட்டினம் திருப்புல்லாணி, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரையும் உப்பு

தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரி மடம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளிலும், பனைக்குளம் நதிப்பாலம் பகுதிகளில் உள்ள பாத்திகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. மழையால் பாத்திகளில் உற்பத்தியான கல் உப்பு கரைந்து வருகிறது.

மேலும் பாத்திகளில் இருந்து பிரித்தெடுத்து லாரியில் ஏற்றி அனுப்புவதற்காக குவித்து வைத்த கல் உப்பும் மழை நீரில் கரைந்து வீணாகிறது. மழையால் உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர்.


Next Story