கரூா் ஆயுதப்படை மைதானத்தில் நினைவுத்தூணுக்கு வீரவணக்கம்


கரூா் ஆயுதப்படை மைதானத்தில் நினைவுத்தூணுக்கு வீரவணக்கம்
x

உயிா்நீத்த காவலா்களின் நினைவு நாளையொட்டி கரூா் ஆயுதப்படை மைதானத்தில் நினைவுத்தூணுக்கு வீரவணக்கம் செலுத்தி போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

கரூர்

காவலர் வீரவணக்க நாள்

இந்தியா முழுவதும் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புபடை, தொழில்பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை, மாநில காவல்துறையை சேர்ந்த காவலர்கள் பணியின்போதும், வீர, தீர செயல்களின்போதும் உயிர்நீத்த நாளை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

அந்தவகையில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உறுதிமொழி

அப்போது அவர் பேசுகையில், இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 264. மடிந்த இவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று என்று உறுதி பூண்டு, அவர்களின் வீர தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம், என்றார்.

அதன்பின்னர் 66 குண்டுகள் முழங்க காவலர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story