சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து


சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து
x

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பை சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டு உணவு சாப்பிட்டனர். இதில் பொங்கல், சாப்பாடு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த சமபந்தி விருந்து 150 பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு செய்திருந்தார். இதேபோன்று கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலிலும் சமபந்தி விருந்து நடைபெற்றது


Next Story