சமத்துவபுரம் வீடுகள் பராமரிப்பு பணி


சமத்துவபுரம் வீடுகள் பராமரிப்பு பணி
x

வடசித்தூரில் 84 லட்சத்தில் சமத்துவபுரத்தில் வீடுகளை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது

கோயம்புத்தூர்

நெகமம்

வடசித்தூரில் ரூ.84 லட்சத்தில் சமத்துவபுரத்தில் வீடுகளை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சமத்துவபுரம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், வடசித்தூர் ஊராட்சியில், கடந்த 2001-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்டப்பட்டது. அங்குள்ள, 100 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைய டுத்து போதிய பராமரிப்பு இல்லாததால் சமத்துவபுரத்தில் வீடுகள் சேதம் அடைந்தன. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதம் அடைந்து காணப்பட்டது.

அவ்வப்போது ரோடு மேம்பாடு, மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் என, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

அதன்பின் பல ஆண்டுகளாக, வீடுகள் புதுப்பிக்கப்படாமல், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்தன இதனால், வீடுகள் சிதிலமடைந்து கான்கிரீட்பெயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் மழைக்காலத்தில் வீட்டின் மேற்கூரையில் மழைநீர் கசிந்து ஆபத்தான நிலையில் வாழ்ந்து வந்தனர் ரோடுகள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளன,

நிதி ஒதுக்கப்பட்டது

இதனால் இருசக்கர வாகனம் செல்லக்கூட அச்சம் இருந்தது.மேலும் தெருவிளக்குகள் பற்றாக்குறை, சமுதாய நலக்கூடம் பழுதடைந்து எந்தவித சுப காரியங்கள் செய்ய முடியாமல் தவித்தனர். என, அடிப்படை வசதிகளில் பல்வேறு பிரச்னைகள் நிலவியது

இந்நிலையில், சமீபத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடுகளை மேம்படுத்த, ஊராட்சியினர் கணக்கெடுப்பு நடத்தி, அரசிடம் நிதி கேட்டு கருத்துரு அனுப்பினர். தற்போது, நிதி ஒதுக்கப்பட்டது.

இது குறித்து வடசித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாவது:-

சமத்துவபுரத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. மேலும் ரோடு, தெருவிளக்கு, சமுதாய நலக்கூடங்கள் ரூ.34 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் ரூ.84 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சமத்துவபுரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளம் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story