கண்ணமங்கலம், படவேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா


கண்ணமங்கலம், படவேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா
x

கண்ணமங்கலம், படவேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம், படவேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.

இதேபோல் படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் தாமரைச்செல்விஆனந்தன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பவன்குமார், ரஞ்சித்குமார், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


Next Story