வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு


வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x

வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஏனாத்தூரில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மூலம் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டது. இங்கு 100 குடியிருப்புகள் உள்ளனர்.

மேலும் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்பு வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துபுரத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை காஞ்சீபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் வரதன் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.


Next Story