201 கிராம ஊராட்சிகளில் நாளை சமத்துவ பொங்கல் விழா


201 கிராம ஊராட்சிகளில் நாளை சமத்துவ பொங்கல் விழா
x

201 கிராம ஊராட்சிகளில் நாளை சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது.

அரியலூர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் "சுகாதார-சமத்துவ பொங்கல் விழா" நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது, அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story