சமத்துவபுரம் புனரமைப்பு பணி
திட்டக்குடி அருகே சமத்துவபுரம் புனரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
ராமநத்தம்:
திட்டக்குடி அருகே தொளார் ஊராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு சமத்துவபுரத்தில் 78 கட்டப்பட்டன. ஆனால் இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமலேயே சேதமடைந்தன. இதையடுத்து இந்த வீடுகளை ஜூலை மாதம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டார். அப்போது சேதம் அடைந்த 78 வீடுகளுக்கும் தாலா ரூ.1 லட்சம் வீதம் புனரமைக்கப்படும் என்றார். அதன்படி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி கூடுலாக 22 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று பார்வையிட்டார். பின்னர் குமாரை கிராமத்தில் கட்டப்படும் தடுப்பணை பணியையும் அவர் பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனார், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொளார் அருள்மணி, இறையூர் சுதா ரத்தினசபாபதி, நெடுங்குளம் ராஜதுரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.