வால்பாறையில் சமத்துவ பொங்கல் விழா


வால்பாறையில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சமத்துவ பொங்கல் விழா

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ -மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை முன்னிட்டு மாணவ -மாணவிகள் வேட்டி -சேலை அணிந்து கரும்பு நட்டு வைத்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். பெற்றோர்கள் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்கள் சந்திப்பு விழா ஆகியவை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு உணவு உறைவிடப் பள்ளி நிர்வாகத்தின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.


Next Story