சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும், ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story