சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வருவதால் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-நிஜாமுதீன் சம்பர்கிரந்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12651) வருகிற 19-ந் தேதி, 21, 26 மற்றும் 28-ந் தேதிகளில் மற்றும் மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்-மதுரை சம்பர்கிரந்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12652) வருகிற 14-ந் தேதி, 16, 21 மற்றும் 23-ந் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில்கள் மதுரை-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, இந்த ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story