சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

திருச்சி

சமயபுரம், ஆக.13-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் வந்தார். பின்னர் அவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு சென்றார்அவரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் எமதர்மர் சன்னதி, நீலிவனநாதர் சன்னதி, விசாலாட்சி அம்பாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்திய அவர் கொடி மரத்தை வணங்கினார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலினை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் குருக்கள் வரவேற்றனர். தொடர்ந்து துர்கா ஸ்டாலின் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனை பயபக்தியுடன் வணங்கினார்.

பின்னர், கோவிலை வலம் வந்து கொடி மரத்தை வணங்கிய பிறகு கார் மூலமாக திருச்சி சென்றார். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருப்பராய்த்துறையில் உள்ள கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


Next Story