மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தை பவுர்ணமியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்

தை பவுர்ணமியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பத்திரகாளியம்மன் கோவில்

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடைபெறும்.

இதே போல் ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி அன்று இரவு சிறப்பு பூஜை நடைபெறும். இதேபோல ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் ஆங்கில, தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்புகளிலும் மற்றும் முக்கியமான நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் தை பவுர்ணமியை முன்னிட்டு மாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். பின்பு இரவு பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.. அதன்பின்பு பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகிக்கப்பட்டது. பவுர்ணமி பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story