மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில்கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா சாமி தரிசனம்
மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார்
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை திருப்புவனத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தொழில் பிரிவு முன்னாள் செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான செல்வராஜ் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர். பின்பு மடப்புரம் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா தனது குடும்பத்தினருடன் உள் பிரகாரம் சுற்றி வந்து அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மனை தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story