குப்பைகள் கொட்டி வந்த இடத்தில் சாமி சிலை


குப்பைகள் கொட்டி வந்த இடத்தில் சாமி சிலை
x

சிவகாசியில் குப்பைகள் ெகாட்டி வந்த இடத்தில் சாமி சிலையை வைத்து நூதன நடவடிக்கை மேற்கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் குப்பைகள் ெகாட்டி வந்த இடத்தில் சாமி சிலையை வைத்து நூதன நடவடிக்கை மேற்கொண்டனர்.

சாலையில் குப்பைகள்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு பகுதியில் அம்மன்கோவில்பட்டி தென்பாகம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த குப்பைகள் அதே பகுதியில் சாலையில் கொட்டி வைக்கப்பட்டு வந்தது.

இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைந்து வந்தது. பலமாக காற்று வீசும் போது குப்பைகள் காற்றி அடித்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டது.

நூதன நடவடிக்கை

இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் முத்துபாண்டி, முத்துராஜ், ஆதிலட்சுமி ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.

பின்னர் திடீரென அங்கு சாமி சிலை ஒன்றை கொண்டு வந்து பூஜை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பூஜையில் மாநகராட்சி கவுன்சிலர் ரவிசங்கர் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நூதன நடவடிக்கையில் ஈடுபட்டதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர்.


Next Story