கோவிலில் சாமி சிலை உடைப்பு
கோவிலில் சாமி சிலை உடைக்கப்பட்டது.
முசிறியை அடுத்த வெள்ளூர் சத்திரத்தில் மூக்கரையர் பிள்ளையார் கோவில் அருகில் திறந்தவெளியில் மலையாள கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருப்புசாமி சிலை நேற்று முன்தினம் காலை உடைக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த பூசாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி முதன்மை பூசாரியான செல்வ முத்துக்குமார், முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த சிலையை யார் உடைத்தது என்பது பற்றியும், மது போதையில் இருந்தவர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்கள் இதனை செய்தார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக ஒரு கோவிலை கட்ட உள்ளதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சாமி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.