கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ைளயை தடுக்க வேண்டும்


கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ைளயை தடுக்க வேண்டும்
x

கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ைளயை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

நெமிலி வழியாக ஓடும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரெட்டிவலம், அகவலம், வேட்டாங்குளம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து தினமும் இரவில் மணல் அள்ளி மாட்டுவண்டி, டிப்பர் லாரி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றில் கடத்துகிறார்கள். அதில் ரெட்டிவலம் பகுதியில் தான் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. மணல் கொள்ைளயை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story