மணல் குவாரி அலுவலக கண்ணாடி உடைப்பு


மணல் குவாரி அலுவலக கண்ணாடி உடைப்பு
x

ஆற்காடு அருகே மணல் குவாரி அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த வளவனூர் பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு லாரிகளில் மணல் எடுக்க வருபவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பில் வழங்குவதற்காக தற்காலிகமாக அலுவலகம் மற்றும் கழிவறை அமைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணல் குவாரி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் அதன் அருகே இருந்த தற்காலிக கழிவறையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலுவலகம் மற்றும் கழிவறையை சேதப்படுத்திய நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story