மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரிக்கிறது: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரியை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் பொன்னையாற்றில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதை படம் பிடித்த ஓய்வுப்பெற்ற ராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான உமாபதி என்பவரை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளது.

ஒரே மாவட்டத்தில், ஒரே இரவில் நிகழ்ந்துள்ள இரு தாக்குதல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க முயலும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. எனவே மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story