வேதாரண்யம் கடற்கரையில் மணல் சிற்பம்


வேதாரண்யம் கடற்கரையில் மணல் சிற்பம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

தூய்மை இந்தியா திட்டத்தில் வேதாரண்யம் கடற்கரையில் மணல் சிற்பம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது. தூய்மை பணியினை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கான மணல் சிற்பம், ஓவியம் வரைதல் போட்டியினை நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மங்களநாயகி ராமச்சந்திரன், ஓவர்சீஸ் அமுதன், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடற்கரையில் மாணவர்கள் மணல் சிற்பங்களை வரைந்தனர். மேலும் கடற்கரையில் உள்ள தர்ப்பணம் மண்டபத்தை தூய்மைப்படுத்தி அதிலும் ஓவியங்களை வரைந்தனர். மணல் சிற்பம் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விரைவில் பரிசு வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்தார்.


Next Story