மணல் கடத்தல்


மணல் கடத்தல்
x

பாபநாசம் பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

பாபநாசம்:-

பாபநாசம் பகுதியில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன் பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள், அவற்றை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story