மணல் கடத்தல்; 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்


மணல் கடத்தல்; 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
x

மணல் கடத்தல் வழக்கில் 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள அருளவாடி தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 சரக்கு வாகனங்களை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்ததில், தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 2 சரக்கு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய விழுப்புரம் அருகே தெளியை சேர்ந்த வேலாயுதம், முருகதாஸ், ராஜா ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வழிமறித்தபோது சரக்கு வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

உடனே அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய டிரைவரான பேரங்கியூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story