மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தல்


மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தல்
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ்நிலையம் அருகில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டு விட்டு 2 நபர்களும் தப்பிவிட்டனர். போலீசார் வாகனங்களை சோதனையிட்டபோது அதில் தலா 2 மூடைகள் வீதம் 4 மூடைகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து 4 மணல் மூடைகளுடன் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பெரியபட்டினம் மேற்குத்தெருவை சேர்ந்த ஹமீத்கான் (38) மற்றும் இன்னொருவரை தேடிவருகின்றனர்.

1 More update

Next Story