மணல் கடத்தல்;வாலிபர் கைது
திருமருகல் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் திருக்கண்ணபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏர்வாடி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஏர்வாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சூரியமூர்த்தி (வயது 24) என்பதும், அவர் மணல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய மூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story