அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேர் கைது
x

தஞ்சையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், மே.28-

தஞ்சையை அடுத்த கரந்தை வளம்புரி சாலையில் தஞ்சை மாநகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை மறித்து சோதனை செய்தனர். அதில் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர்(வயது 27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனர்.இதே போல் அதே பகுதியில் மீண்டும் போலீசார் சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை மறித்து அதை ஓட்டிவந்த பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி(55) என்பவரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.


Next Story