மணல் திருடியவர் கைது
நரிக்குடி அருகே மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள நல்லுகுறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் மற்றும் தலையாரிகளான சசிகுமார், இருளப்பன் ஆகியோர் பாப்பாங்குளத்திலிருந்து வீர ஆலங்குளம் செல்லும் நீர்வரத்து ஓடைப்பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது ஓடைப்பகுதியில் வீர ஆலங்குளத்தைச் சேர்ந்த தவமுத்து (வயது 48) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தும் மணல் திருட்டில் ஈடுபட்ட தவமுத்தையும் வீரசோழன் போலீசில் ஒப்படைத்தார். இதன் பேரில் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து தவமுத்துவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story