தனுஷ்கோடியில் மணல் சிற்பம்


தனுஷ்கோடியில் மணல் சிற்பம்
x

தனுஷ்கோடியில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆவுலியா என்று கடல் பசுவானது அதிகமாக அழிந்து வருவதாக கூறப்படுவதுடன் இதன் எண்ணிக்கையும் மிக மிக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று இந்திய வன உயிர் நிறுவனத்தின் சார்பில் அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசுவை பாதுகாக்க வலியுறுத்தியும், கடலில் உள்ள தாழை, கடல்பாசி உள்ளிட்ட செடிகளை பாதுகாக்கவும் மீனவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு கடல் பசுவை அழிவில்இருந்து பாதுகாக்கவும் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேற்று மணலில் கடல் பசு சிற்பம் வடிவமைக்கப் பட்டு இருந்தது. இந்த கடல் பசு மணல் சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ருக்மணி சேகர் சிரேயாசார், சின்மயா, ஸ்வேதா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து செய்திருந்தனர். தொடர்ந்து கடல் பசுவை பாதுகாப்பது குறித்தும் மற்றும் கடல் மற்றும் கடற்கரை பகுதியில் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை போட வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலியும் நடைபெற்றது.


Next Story