கல்வராயன்மலை வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கல்வராயன்மலை வனத்துறை அலுவலகத்தில்    சந்தன மரம் வெட்டி கடத்தல்    மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை வனத்துறை அலுவலகத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் இன்னாடு வன சரகத்துக்குட்பட்ட கரியாலூர் பிரிவு வனவர் அலுவலகம் கரியாலூரில் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட சந்தன மரம் ஒன்றை வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வனத்துறை அலுவலக வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர் வேல்முருகன் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலக வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் கல்வராயன்மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story