பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்


பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
x

பத்ரகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே ஒதியத்தூர் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 16-ந்தேதி தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், செடில் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பத்ரகாளியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story