மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்
விவசாய நிலங்களில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர்
திண்டுக்கல்
பழனி அருகே உள்ள ஆயக்குடியில் விவசாய நிலத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்கக்கோரி, பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆயக்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா, எலுமிச்சை, மா, தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது விவசாய நிலங்களில் சுமார் 20 அடி ஆழம் வரை மணலை தோண்டி எடுக்கின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளும் இடம்பெயர்ந்து வருகின்றன. எனவே விவசாய நிலங்களில், மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story