விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூரில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரமத்திவேலூரில் உள்ள ஹேரம்ப பஞ்சமுக விநாயகர், சக்தி நகரில் உள்ள விநாயகர், நல்லியாம்பாளையத்தில் உள்ள விநாயகர், காவிரி பாலம் அருகே உள்ள சத்திரத்து விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஷ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன், சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story