சரபேஸ்வரர் பீடம் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா


சரபேஸ்வரர் பீடம் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா
x

நெமிலி சரபேஸ்வரர் பீடம் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தபோது எடுத்த படம்.

ராணிப்பேட்டை

நெமிலி கரியாக்குடல் பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று சரபேஸ்வரர் பீடம் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யோகானந்த சுவாமிகள், சிவராம சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் வரசித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் உலக நன்மைக்காக சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இதில் காஞ்சீபுரம், சென்னை, வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story