கள்ளக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
கள்ளக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே அம்மகளத்தூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் செல்வ விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் உள்ள சக்தி விநாயகர் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story